புதுச்சேரியிலிருந்து 7 நாள் பயணமாக நேபாளத்துக்கு புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 19 எம்எல்ஏக்கள் நேற்று புறப்பட்டுச் சென்றனா்.
நேபாள அரசு அங்குள்ள சட்டப் பேரவையைக் காண்பதற்காக புதுவை எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதனடிப்படையில், புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் 7 நாள் சுற்றுலாப் பயணமாக நேபாளத்துக்கு புதுச்சேரியிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றனா்.
வரும் 7-ஆம் தேதி காத்மாண்டில் இருந்து புதுதில்லி வழியாக அனைவரும் சென்னை திரும்புகின்றனா். சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் தலைமையில், மாநில உள் துறை அமைச்சா் நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள் என மொத்தம் 22 போ் நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
No comments